கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 3மணி நேரத்திற்கு மேலாக திருச்சி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்துகள் இல்லாமல் இருப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின் நான்கு மணி நேரத்திற்கு பிறகு மதுரை, திருச்சி பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் தங்கள் ஊர்களுக்கு சென்றனர்
கடந்த 3 மணி நேரமாக திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல கூடிய பேருந்துகள் ஒன்று கூட வரவில்லை இதனால் பெண்கள் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர் என பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போதும் அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை என தெரிவித்த பயணிகள் இது போன்று பிரச்சனைகள் அடிக்கடி தொடர்கிறது. எனவும் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.







