கோவையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில், ரத்தினபுரி பகுதியில் இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.
கோவையில் பிற்பகலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக சிங்காநல்லூர், காந்திபுரம்,சாய்பாபா காலனி, ரத்தினபுரி, உக்கடம், பீளமேடு உள்ளிட்டப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக லங்காகார்னர் ரயில் நிலைய மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கிய மழை நீரால் அவ்வழியானப் போக்குவரத்து தடைபட்டது.
மேலும் ரத்தினபுரி ஐசக் வீதி பகுதியில் வீட்டில் இருந்த தென்னை மரம் இடிதாக்கி திடீரென தீப்பற்றி எரிந்தது. மின்சார கம்பிகள் அருகில் இருந்த நிலையில், அச்சத்திற்குளான பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல்
அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தென்னை மரத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்