பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உட்பட இருவர் கைது

கோவையில் தனது செல்லப்பிராணியை எட்டி உதைத்த இளைஞரை தட்டிக் கேட்டதற்காக, பெட்ரோல் குண்டு வீசிய 17 வயது சிறுவன் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை செல்வபுரம் மாசாணியம்மன் கோயில் தெருவில் வசித்து…

கோவையில் தனது செல்லப்பிராணியை எட்டி உதைத்த இளைஞரை தட்டிக் கேட்டதற்காக, பெட்ரோல் குண்டு வீசிய 17 வயது சிறுவன் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் மாசாணியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாண்டியன் மற்றும் மனைவி வாசுகி (54). வாசுகி அவரது வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டின் வழியாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அப்சல் (19) மற்றும் 17 வயது சிறுவன் என இருவர் நடந்து சென்றபோது, வாசுகியின் நாய் இருவரையும் பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் நாயை விரட்ட முயன்றதோடு, அப்சல் தனது காலால் நாயை எட்டி உதைத்துள்ளார்.

வாசுகி வீட்டு செல்லப்பிராணி

இதனைப்பார்த்த வாசுகி அப்சல் மற்றும் 17 வயது சிறுவன் இருவரையும் தட்டி கேட்டதால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு,இருவரும் அங்கிருந்தி கிளம்பினர். இதனிடையே திரும்பி சென்ற 17 வயது சிறுவன் தனது நண்பனான புவியரசனிடம் புலம்ப இருவரும் இணைந்து வாசகியின் வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசிக் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை வாசகியின் மீது வீசியதில் வாசகி நகர்ந்து கொண்டார்.

இதனால் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வாசகி வீட்டு சுவிரில் பட்டது. இதுகுறித்து வாசுகி செல்வபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குண்டுவீச்சு மற்றும் கொலை மிரட்டல் உள்பட நான்கு பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புவியரசு மற்றும் அந்த 17 வயது சிறுவன் இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்திய காவல்துறையினர் புவியரசுவை சிறைக்கும் சிறுவனை சிறுவர் சீர்சிருத்தபள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.