சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
கோயம்பேட்டில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார்.
மேம்பால கட்டுமான பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், கலைஞர் நூலகம் அமையும் இடம் வரும் 23ஆம்தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பொதுப்பணித் துறைக்கு தனி இணையதளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ஏ.வ.வேலு கூறினார்.







