முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய சித்தி !

குழந்தையை அடித்துக் கொன்றுவிட்டு தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடிய சித்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் ஷமிலுதீன். லாரி ஓட்டுநரான இவருக்கு நஸ்ரின் என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு நசிபா என்ற பெண் குழந்தை உண்டு. உடல்நலக்குறைவால் நஸ்ரின் இறந்துவிட்ட நிலையில், ஷமிலுதீன் இரண்டாவதாக அப்ஷானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவி மூலமாக ஷமிலுதீனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தமக்கு குழந்தை பிறந்ததும், நசிபாவை, அப்ஷானா துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், குழந்தை நசிபா வீட்டில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி, இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அப்போது, இறந்த குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததைப் பார்த்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அப்ஷானா, குழந்தையை அடித்து துன்புறுத்தியதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அப்ஷானாவை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று சித்தி நாடகமாடிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நதிகளுக்குச் செல்லும் பதக்கங்கள்… – முகமது அலியை பின்பற்றும் மல்யுத்த வீராங்கனைகள்??

Jeni

டெல்லி மாநகராட்சியை பாஜகவிடமிருந்து கைப்பற்றியது ஆம் ஆத்மி

Web Editor

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம்: கடந்த 11 நாட்கள் நடந்தது இதுதான்!

Web Editor