தொடரும் கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டத்தில் 26 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில், குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம் மெயின்…

தென்காசி மாவட்டத்தில் 26 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில், குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளது. சீசன் காலங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று (டிச.17) அதிகாலையில் இருந்து தற்போது வரை சுமார் 26 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தொடரும் கனமழை – எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

இந்நிலையில், கனமழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிப்பதற்கு இன்று இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.