விருதுநகரிலும் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகரில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்…

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகரில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, மழைபொழிவின் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால், அதற்கு ஏற்ப தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : அதிகனமழை எதிரொலி – நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து!!

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.