கோரம்பள்ளம் குளம் உடைந்து ஊருக்குள் பாய்ந்த வெள்ளம்! அதிர்ச்சிக் காட்சிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : வெளுத்து வாங்கும் கனமழை… தண்ணீரில் மிதக்கும் தென்மாவட்டங்கள்…!

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கொட்டி வரும் அதிகனமழையால்  பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.  வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல இடங்களில் நேற்று மின்சாரம் முழுமையாக தடைபட்டது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், கோரப்பள்ளம் குளம் உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. கோரம்பள்ளம் குளத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட  உடைப்பு காரணமாக  வெள்ள நீர் ஊருக்குள் செல்லத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

https://twitter.com/news7tamil/status/1736623905476104572

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.