அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ’குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குறார். ஏகே – 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பானது அஜித்தின் கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா மட்டுமின்றி கார் பந்தயத்திலும் ஆர்வம் கொண்ட அஜித். சொந்தமாக கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ள அவர் பல்வேறு நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது அவர், 24 ஹெச் சீரிஸ்- மத்திய கிழக்கு டிராபிக்கான பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில், துபாய் ரேஸிங் களத்தில் அஜித் குமாரை பல்வேறு திரைபிரபலங்கள் சந்தித்துள்ளனர்.
அதன் படி விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.









