கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐஜி சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினரான விவேக் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், கோடநாடு எஸ்டேட்டின் மற்றொரு உரிமையாளரான சசிகலாவிடம் நாளை தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். கோடநாடு எஸ்டேட்டில் காணாமல் போன பத்திரங்கள் சென்னையில் கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பாகவும், காணாமல்போன ஆவணங்கள், பொருட்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை காலை 10 மணி அளவில் தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.