முக்கியச் செய்திகள் தமிழகம்

இரட்டை ரயில் பாதை பணி; போக்குவரத்தில் மாற்றம்

வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெற உள்ளதால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி – நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர் – ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெறவுள்ளதால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி திருச்சி – திருவனந்தபுரம்,  திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (எண் 22627/22628) இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை திருநெல்வேலி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில் (எண் 20691) திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று முதல் 28-ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறுமார்க்கத்தில் நாளை (ஏப்ரல் 21) முதல் 29-ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில் (எண் 20692) நாகர்கோவில் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24-ம் தேதி புதுச்சேரியிலிருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயில் (எண் 16861) மற்றும் வரும் 25-ம்தேதி கன்னியாகுமரியில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – புதுச்சேரி விரைவு ரயில் (எண் 16862) ஆகியவை திருநெல்வேலி – கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் 28-ம் தேதி சென்னையில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (எண் 12667) மற்றும் வரும் 29-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தவறான தகவல்களை பதிவு செய்யும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

Halley Karthik

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு

Janani