முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலை

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை காட்டுப்பகுதிக்குள் மீன்பிடி தொழிலாளி வெட்டிக் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் மஞ்சள், களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தொடர்ந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர பாதுகாப்பு படை மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர்  மதன்குமார். இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை பகுதியில் லயோ என்பவருடன் சேர்ந்து மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் மதன்குமார், லயோ மற்றும் அவரது நண்பர்கள் கடந்த திங்கள்கிழமை இரவு ஆலந்தலை அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் மதன்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொலையை மறைக்க உடலை பெட்ரோல் ஊற்றி எரிந்துள்ளனர். ஆனால் உடல் சரியாக எரியாததால் அந்த இடத்திலேயே புதைத்துள்ளனர். பின்னர் லயோ மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து நள்ளிரவு போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை தொடர்ந்து ஆலந்தலை பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக லயோ, மல்லையா என்ற முத்துமல்லைராஜ், மரிய அந்தோணி ஆகியோரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் தொழில் பற்றி போலீசாரிடம் மதன்குமார் தெரிவித்ததால் காட்டுப் பகுதியில் மது அருந்தும் போது கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு பின்னணியாக செயல்பட்ட ராஜா மற்றும் ஜாக்சன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்து புதைக்கப்பட்ட மதன்குமார் உடலை போலீசார் தாசில்தார் முன்னிலையில் இன்று தோண்டி எடுத்து விசாரணை செய்ய உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

Vandhana

ஆளுநர் உரை – அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

G SaravanaKumar

ரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கி சென்ற கொள்ளையர்கள்

Jayasheeba