மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நுழைய முயன்ற 5அடி நீளமுள்ள சாரை பாம்பு. ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்து சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறையானர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்புறம் உள்ள மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை அலுவலக நுழைவுவாயிலின் ஓரத்தில் திடிரென 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்து அலுவலகத்துக்குள் செல்ல முயன்றது இதனைக் கண்ட ஊழியர்கள், அலறி அடித்து கொண்டு கூச்சல் இட்டனர்.
உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு,பாம்பு
அலுவலகத்திற்குள் நுழையாதவாறு கண்காணித்து வந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற 5 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து குழாயினுள் அடைத்து காப்புக்காட்டில் விட எடுத்துச் சென்றனர்.
தீயணைப்புத் துறையினர் பிடித்த பிறகு தான் அது 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு என தெரிய வந்தது. அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பாம்பு பிடிக்கப்பட்டது என்ற செய்தியை கேட்ட பிறகு தான் அலுவலக ஊழியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
-ஸ்ரீ மரகதம்