முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புள்ளி மான்களை பாதுகாக்க கோரிய வழக்கு -வன பாதுகாவலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புள்ளி மான்களை பாதுகாக்க கோரிய வழக்கில் வன பாதுகாவலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நெல்லையை சேர்ந்த முத்துராமன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிடையில் தாக்கல் செய்த மனு. அதில், “கங்கை கொண்டான் காப்புக்காடு பீட்-1 பகுதியில் 288.40 ஹெக்டேர் பரப்பளவில் கங்கை கொண்டான் புள்ளிமான்கள் சரணாலயம் 2013ல் அறிவிக்கப்பட்டது. புள்ளிமான்களைப் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சரணாலயம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இங்கு வனத்துறை மூலம் குடிநீர்த் தொட்டி நடைபாதை, ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. புள்ளி மான்கள் கங்கைகொண்டான் சரணாலயத்தில் மட்டுமின்றி, தாழையூத்து காப்புக் காட்டில், 212 புள்ளி மான்களும், கங்கை கொண்டான் காப்புக்காடு பீட்-2 பகுதியில் 107 புள்ளிமான்களும் உள்ளது.

ஆனால், இந்த தாழையூத்து காப்புக் காடு, கங்கை கொண்டான் காப்புக்காடு பீட்-2 ஆகிய பகுதிகள் புள்ளிமான் சரணாலயமாக அறிவிக்கப்பட வில்லை. இதனால், இங்குள்ள புள்ளி மான்கள், இரை தேட செல்லும் போது விபத்துக்கு உள்ளாகின்றன. பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கின்றன.

எனவே, புள்ளி மான்களை பாதுகாக்க, தாழையூத்து காப்புக் காடு, கங்கை கொண்டான் காப்புக்காடு பீட்-2 உள்ளிட்ட பகுதிகளையும் கங்கை கொண்டான் புள்ளி மான் சரணாலயத்துடன் சேர்க்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு வனத்துறை செயலாளர், மாவட்ட முதன்மை வன பாதுகாவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

-வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அன்னை நயன்தாராவின் கதை

EZHILARASAN D

வாக்களிக்கும்போது முககவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன்!

கொரோனாவுக்கு கோயில் கட்டும் 90 வயது முதியவர்

G SaravanaKumar