இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு: இதுவரை 15 உடல்கள் மீட்பு

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் கடும் பாதிப்பு…

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கின்னார் (Kinnaur) மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்
பாறைகள் திடீரென விழுந்ததில் அந்த வழியாக சென்று கொண்டு இருந்த அரசுப் பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன.

அரசு பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. சில வாகனங்கள் அப்பளம் போல நொறுங்கின. வாகனங்களில் இருந்தவர்கள் அப்படியே புதைந்தனர்.

இதையடுத்து, மீட்பு பணிகளில் இந்தோ – திபெத் எல்லை காவல் படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்துக்கு பிறகு 13 பேர் படுகாயங் களுடன் மீட்கப்பட்டனர். 8 பேரின் உட்ல்கள் மீட்கப்பட்டன.

கடந்த இரண்டு நாட்களாக நடந்த மீட்பு பணிகளில் நேற்று வரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், இன்று காலையில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை 15 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.