ஓடிடியில் இன்று வெளியாகிறது நயன்தாராவின் நெற்றிக்கண்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் நெற்றிக்கண். படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இந்தப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில்…

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் நெற்றிக்கண். படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இந்தப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக இன்று நண்பகல் 12.15 மணிக்கு வெளியாகிறது. படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்திருப்பது முன்னதாக வெளியான ட்ரெய்லரின் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் உதய நிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படம் போன்று இருப்பதாக சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப்படம் கொரியன் படமான பிலைண்ட் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்காகும். சமீபத்தில் நயன்தாரா பட விளம்பரத்திற்காக டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். முன்னதாக நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.