நடிகை ராஷ்மிகா நடித்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் விளம்பர பட வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான, ராஷ்மிகா, அப்படியே டோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இப்போது, அல்லு அர்ஜுன் ஜோடியாக ’புஷ்பா’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது. அடுத்து, பாலிவுட்டில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன்‘மிஷன் மஜ்னு’, அமிதாப்பச்சனுடன் ‘குட் பை’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில், ராஷ்மிகா – இந்தி நடிகர் விக்கி கவுசல் நடித்துள்ள மச்சோ ஸ்போர்டோ (macho sporto) விளம்பரம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. டிவிக்களில் ஒளிப்பரப்படும் இந்த விளம்பரம் ராஷ்மிகாவுக்கு இந்தி ஏரியாவில், முதல் படம் வெளியாகும் முன்பே, மார்க்கெட்டை அதிகரித்திருக்கிறது.
இந்த விளம்பர வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு எப்படி கிடைத்தது என்பதுபற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த விளம்பரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கியாரா அத்வானி. இந்தி நடிகையான இவர், இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்து வருகிறார். கியாரா, சில படங்களில் ஒப்பந்தம் செய்யபட்டதால் விளம்பர நிறுவனம் கேட்ட தேதியில் அவரிடம் கால்ஷீட் இல்லை. இதனால், அந்த விளம்பரத்தை தயாரித்தவர்கள், நடிகை ராஷ்மிகாவை தொடர்பு கொண்டனர்.

இப்படியொரு வாய்ப்பை விடுவாரா என்ன? உடனே ஒப்புக்கொண்டார் ராஷ்மிகா. இப்படித்தான் இந்த விளம்பரத்தில் அவர் வாய்ப்பு பெற்றதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளது.









