குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதை யும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உயிரிழந்த 13 பேரின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, பிபின் ராவத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும், மதுலிக்கா மற்றும் ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடங்கிய பெட்டிகளுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். முப்படைத் தளபதி மற்றும் அவர் மனைவியின் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரி களின் குடும்பத்தினருக்கு தனித் தனியாக கடிதம் எழுதியுள்ளார். அதில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். இந்தக் கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டு தாங்கள் பலத்தையும் தைரியத்தையும் பெற வேண்டும் என விரும்புவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.







