முக்கியச் செய்திகள் தமிழகம்

தொலைந்துபோன சாவி: உடைக்கப்பட்ட வாக்குப்பெட்டி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்த காரணத்தினால் சுத்தியல் மூலம் பூட்டு உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 6,228 போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் அறைகளில் அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் https://tnsec.tn.nic.in இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்தது. இதனால் சுத்தியல் மூலம் வாக்குப்பெட்டியின் பூட்டு உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மேலும் மரக்காணம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறையினருக்கும், முகவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் கைகலப்பில் முடிந்தது. இதனால் வாக்கு எண்ணும் பணி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

பட்டாசு வெடித்து சிதறி வீடு தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு

Ezhilarasan

சுதந்திர தின விழா; மதுரை இரயில் நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

Halley Karthik

பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி

Gayathri Venkatesan