பிரபல நடிகைக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
தமிழில், ’விரட்டு’ என்ற படத்தில் நடித்திருப்பவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், இந்தி, கன்னடத்திலும் நடித்திருக்கிறார். இப்போது பாலகிருஷ்ணா ஜோடியாக Akhanda என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக இப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்துள்ளார்.
அதில், ’எனக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. தடுப்பூசி செலுத்திய பிறகும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏற்கனவே ஒரு முறை எனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தும் இப்போது மீண்டும் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.