முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் 15 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.

கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக, 18 ஆயிரத்தை தாண்டி இருந்த கொரோனா தொற்று இப்போது 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் , 14,313 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் 18,132 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 18,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,39,85,920 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில்,26,579 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 057 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,50,963 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 95,89,78,049 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 65,86,092 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வீட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மத்திய அரசு

Halley karthi

இஸ்ரேல் தாக்குதலில் 188 பேர் பலி!

சோளக்காட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுப்பு

Saravana Kumar