கேரளாவின் 15-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் மாலை 7 மணி நிலவரப்படி 70. 04% வாக்குப்பதிவுடன் நிறைவுபெற்றது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் 15 வது சட்ட சபைக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும் (LDF) ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF)இடையே கடும் போட்டி நடைபெற்றுவருகிறது. மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் 16 தனித் தொகுதிகளாகும். இத்தேர்தலில் 4 2 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கண்ணூர் தொகுதியில் குடும்பத்தாருடன் முதல்வர் பினராய் விஜயன் தன்னுடைய ஜனநாயக கடமையாற்றினார். அதேபோல் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாட் வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினைப் பதிவுச் செய்தார்.

பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் பொன்னை வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினைப் பதிவுச் செய்தார். பின்னர் செய்தியாளர்களின் பேசிய அவர், “நான் நிச்சயமாகப் பாலக்காடு தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். பாஜகவில் என்னுடைய நுழைவு அக்கட்சி மீதான பார்வையை மக்கள் மனதில் மாற்றியுள்ளது” என்றார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி 97 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி கைபற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராகப் பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சி 47 இடங்களிலும், பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
