கன்னியாகுமரியில் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 7 மணியளவில் நிறைவுப் பெற்றது. கன்னியாகுமரியில் சட்டப்பேரவைத் தேர்தல் உள்பட நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் நடந்து முடிந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் தனது வாக்கை செலுத்தினார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த்தும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை இன்று ஆற்றினார்.
நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டியிட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட கன்னியாகுமரியில் 67 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். வாக்குப்பதிவு மாலை 7 மணியளவில் நிறைவடைந்த நிலையில், குமரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 5 மணி நிலவரப்படி 62.14 சதவிகிதமாக பாதிவாகி உள்ளது.







