கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மதியம் 1 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களில் முன்னனியில் உள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, பாஜக என மும்முனை போட்டி நடைபெற்றுவருகிறது.
இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களில் முன்னனியில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் முன்னனியில் உள்ளது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தர்மதம் தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி தலைவர் உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிடும் ‘மெட்ரோமேன் ஸ்ரீதரன் போட்டியிடும் பாலக்காடு தொகுடிதியிரும் முன்னனியில் உள்ளனர்.
கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னனியில் உள்ள நிலையில் மீண்டும் பினராய் விஜயன் தலைமையிலான ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.







