முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

2 வெற்றிகளைப் பதிவு செய்த திமுக கூட்டணி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாகை மாலி கீழ்வேளூர் தொகுதியில், 67,988 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி 67, 988 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இவர் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட 16,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசமாக்கி இருக்கிறார். 18 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை இங்கு நடைபெற்றது.

விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.வி மார்கண்டேயன் 89, 130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவர் அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பனைவிட 37,893 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தன்வசமாக்கியுள்ளார்.

Advertisement:

Related posts

1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்

Gayathri Venkatesan

இன்று ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் சீமான்…

Saravana Kumar

கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

Jeba