கேரள மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரி கூட்டணி வெற்றி பெறும் எனத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் முடிவுகள் மறுநாள் (மே 2ஆம் தேதி) வெளியாக உள்ளன.
இந்நிலையில், ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், கேரளாவில், இடதுசாரி கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 62 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக இரண்டு இடங்களில் வெற்றி பெறும் என அந்த கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், இடதுசாரி கூட்டணி 112 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







