கேரள மாநிலம் மலப்புரம் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை
தடுமாறியதில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே குட்டிபுரம் -திரூர் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறியதில் எதிரே வந்த கார், ஆட்டோ மற்றும் பார்சல் வாகனம் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த நபர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சி சி டி வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இந்த நிலையில் கார் விபத்துக்குள்ளான சி சி டி வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-ரெ.வீரம்மாதேவி