பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டி!

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள…

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார்.

பண்ருட்டியில் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார். 2001, 2006, ஆகிய ஆண்டுகளில் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.