கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனைக் கேரளாவைச் சேர்ந்த பெண் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து திருணம் செய்துள்ளார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனைக் கேரளாவைச் சேர்ந்த பெண் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து திருணம் செய்துள்ளார்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கேரளாவில் 28,469 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனாவின் பாதிப்பால் நாட்டு மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் மனத்திற்கு நம்பிக்கை அளிக்கும் சில சம்பவங்களும் நடந்துள்ளது. கேரளாவில் உள்ள ஆலப்புழா மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சரத் மோன் என்பவரை அபிராமி என்பவர் திருமணம் செய்துள்ளார். மணமகன் சரத் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, திருமணத்திற்காகக் கேரளாவிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவரது அம்மாவிற்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்நிலையில் இருவரும் ஆலப்புழா அரசு மருத்துவமனையின் கொரோனாப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் அவர்களது திருமணம் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற இருந்தது. மேலும் கொரோனாவால் மணமகன் பாதிக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியாளர் அனுமதியுடன் மணமகள் அபிராமியும் மணமகன் சரத் மோனும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தின்போது மணமகள் அபிராமி கொரோனா பாதுகாப்பு உடை அணிந்திருந்தார். மேலும் மணமகன் நீல நிறச் சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்தார். மேலும் இத்திருமணம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.