புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 30ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகளையும் மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. புதுச்சேரியில், ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த திரையரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வரும் 30ம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.







