காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனை கொன்றதாக பிரபல கன்னட நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னடத்தில் வெளியான ’இடம் பிரேமம் ஜீவனம்’, ’ஒண்டு கண்டேயா கதே’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ஷனயா கத்வே. இவர் நியாஸமகத் கடிகர் (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரின் சகோதரர் ராகேஷ் கத்வே (32) எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதை காதலர் நியாஸமகத் கடிகரிடம் நடிகை ஷனயா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரும் அவர் நண்பர்களும் இணைந்து ராகேஷ் கத்வேவை கொலை செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிலேயே ராகேஷ் கத்வே கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி விசாரணை நடத்திய ஹூப்ளி போலீசார், சகோதரனை கொலை செய்ததாக நடிகை ஷனயாவை கைது செய்தனர். இதையடுத்து
நியாஸகமத் கடிகர் (21), தவுசிஃப் சன்னாபூர் (21), அட்லஃப் முல்லா (24), அமன் கிரானிவாலே (19) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சகோதரனை நடிகை கொலை செய்திருப்பதாகக் கூறப்படுவது கன்னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







