உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலக தரப்பில் கடிதம் வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் களமசேரியில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டுகள் வெடித்ததஒ ஒட்டி, தமிழ்நாடு உளவுத்துறை, கியூ பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு, அனைத்து காவல் ஆணையர்கள், ரயில்வே ஏடிஜிபி, ஐஜி, டிஐஜிக்களுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு டிஜிபி அலுவலக தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டு தலங்கள், மதம் தொடர்பான கூட்டங்கள், துணை தூதரகங்கள், மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்க அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மாநில உளவுத்துறை அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.







