முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விலை குறைவால் காசிமேடு மீன்பிடி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

அதிகாலை முதலே மீன் விற்பனை விலை குறைவால் காசி மேடு மீன் பிடி சந்தையில் மழையை போருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர்.

ஞாயிற்றுக் கிழமையான இன்று நள்ளிரவில் முதலே மழை பெய்து கொண்டிருந்த
போதிலும் அசைவ பிரியர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்தனர். மீன்கள் வரத்தும் விற்பனையும் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிகாலை முதலே மீன் வாங்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் பிரியர்கள்
வரத் தொடங்கி தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். இதே போன்று சுற்றுவட்டார
பகுதிகளில் சில்லறை விலையில் மார்க்கெட் பகுதிகளில் மீன் விற்பனை செய்வதற்காக
மீனவ பெண்கள் ஏலமுறையில் மீன்களை வாங்குவதற்காக கூடியிருந்தனர்.

இதனையும் படியுங்கள்: சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்த மரங்கள் : தமிழக ஆந்திரா போக்குவரத்து துண்டிப்பு

இதே போன்று ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று திரும்பி
வந்த நிலையில் பெரிய மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, திருக்கை,
சுறா, தோல்பாறை, உள்ளிட்ட மீன்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. விலையும்
குறைந்துள்ளதால்  மழையையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு பிடித்த மீன்களை
வாங்கிச் சென்றனர்

வஞ்சிரம் கிலோ 700 முதல் 800வரையுலும், வவ்வாள் கிலோ 500 முதல் 600வரையிலும், சங்கரா கிலோ 300 முதல் 400 வரையிலும், தோல் பாறை கிலோ 350 முதல் 400 வரையிலும், நெத்திலி கிலோ 250 முதல் 300  வரையிலும், வெள்ளை ஊடான் கிலோ 150 மற்றும் காரப்பொடி கிலோ 100 ரூபாய் வரையிலும் நவரை, காணாகந்தை, இறால், மற்றும் நண்டு போன்றவை ரூபாய் 300 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

-யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அருண் விஜய் பயங்கரமாக பாடுவார் என எதிர்பார்க்கவே இல்லை: விஜய் ஆண்டனி

EZHILARASAN D

திருப்பூர் புறா பந்தயம்: வானில் நீண்ட நேரம் பறக்கும் புறாக்களுக்கு பரிசுத்தொகை

Web Editor

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு

EZHILARASAN D