சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்த மரங்கள் : தமிழக ஆந்திரா போக்குவரத்து துண்டிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் ஆந்திரா தமிழ்நாடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை…

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் ஆந்திரா தமிழ்நாடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. வரக்கூடிய 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ந்தது. திடீர் மழையால் சாலகள் முழுவதும் மழை நீர் தேங்கியிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியிருந்ததால் பாதசாரிகள் அவதியுற்றனர். இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ந்தது. தாம்பரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி நகர்,  மயிலாப்பூர், ராயப்பேட்டை , மவுண்ட் ரோடு, சேத்துப்பட்டு  ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்ந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நள்ளிரவு தொடங்கிய சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததால் குடியாத்தம்-பலமனேர் மற்றும் குடியாத்தம்-சித்தூர் ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  கனமழை காரணமாக மின்சாரமும்  துண்டிக்கப்பட்டுள்ளதால்  பொதுமக்களும் அவதியுற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.