கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரம் பகுதியில் 2 குழந்தைகள் உட்பட 18 பேரை கடித்து குதறிய வெறிநாயை பிடித்து செல்ல வேண்டும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை அருகேயுள்ளது கே.பேட்டை ஊராட்சி. இதன் எல்கைக்கு உட்பட்ட திம்மாச்சிபுரம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் கிட்டதட்ட 2000 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரியும் வெறிநாய் ஒன்று கண்ணில் காண்போரையெல்லாம் கடித்து குதறி வருகிறது.
அப் பகுதியில் வசிக்கும் கிரி(4), கிஷோர்(5), தனபாக்கியம்(52), மல்லிகா(60), சந்திரா(53), முத்துலட்சுமி(35), சித்திஸ்வர்(6), சுஜி(2), சாந்தி(42) உள்ளிட்ட 18 நபர்களை கடித்து குதறியுள்ளது. இதில் காயமடைந்த அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
—வேந்தன்







