செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கோதண்டராமர் திருக்கோயில்
ஸ்ரீ சோழ மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி
நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்த ராமர் என்ற கோதண்டராமர் திருக்கோயிலில், வரலாற்று சிறப்புமிக்க மிகவும் பழமையான கங்கைகொண்ட சோழ மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் உள்ளது. மேலும், இவற்றை உபயதாரர் ரூப்கிஷன், மீராகிஷன் ஆகியோரால் ரூபாய் 76 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு , அதனை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இதில் , சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், க.சுந்தர்
எம்எல்ஏ மற்றும் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் ஆகியோர் கலந்து கொண்டு மண்டபங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும், கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
—கு.பாலமுருகன்







