விருதுநகரில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று!

விருதுநகர் மாவட்ட சிறையில், விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை மாவட்டம் , ஜெய்ஹிந்த் புரதத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது அண்ணன் சோமு.…

விருதுநகர் மாவட்ட சிறையில், விசாரணை கைதிக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன்
சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டம் , ஜெய்ஹிந்த் புரதத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது அண்ணன் சோமு. இவர்களது பூர்வீக ஊர் விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமம் ஆகும். மேலும், அண்ணன் தம்பி இருவரும் விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்துள்ளனர். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பூர்வீக வீட்டிற்கு சென்று உள்ளனர்.

மேலும், அண்ணன் தம்பி இருவரும் மது போதையில் வாக்குவாதம் செய்து உள்ளனர். இதனால், அண்ணன் தம்பியை கத்தியால்குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அண்ணன் சோமுவை கைது செய்தனர். பின்னர், சோமுவை மருத்துவ பரிசோதனை செய்து விருதுநகர் மாவட்ட சிறைச் சாலையில் அடைத்தனர்.

இந்நிலையில் , மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சோமுவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சோமுவை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதனால், விருதுநகர் மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கு, மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

—-கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.