கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடங்காத கரும்புகையால் ஐந்தாவது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கானது கரூர் – வாங்கல் சாலையில் உள்ள அரசு காலனி பகுதியில் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் கடந்த
31-ம் தேதி மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து விபத்து ஏற்பட்டது. மலை போல் குவிந்து கிடந்த குப்பைமேட்டில் பற்றிய தீயானது மளமளவென பிடித்து எரிய
ஆரம்பித்தது. தகவல் தெரிந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 15-க்கும்
மேற்பட்டோர் அப்பகுதிக்கு வந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும்
10-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்க ஆரம்பித்தனர்.
தொடர்ந்து பற்றி எரிந்த தீ சிறிது, சிறிதாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும், ஐந்தாவது நாளான இன்றும்(4.8.2023) குவிந்து கிடக்கும் குப்பை மேட்டில் ஒரு சில இடங்களில் முழுவதுமாக அணையாத தீயை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கட்டுக்குள்
கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதி
முழுவதும் கரும்புகை அடங்காமல் வீசிக் கொண்டிருக்கிறது.
ரெ. வீரம்மாதேவி
கரூரில் ஐந்தாவது நாளாக தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்!
கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடங்காத கரும்புகையால் ஐந்தாவது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கானது கரூர் – வாங்கல்…






