கர்நாடக தேர்தல் : இபிஎஸ்-க்கு போட்டியாக ஒரே தொகுதியில் வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் இபிஎஸ் வேட்பாளரை அறிவித்த நிலையில், அதே தொகுதியில் ஓபிஎஸ்-ம் வேட்பாளரை அறிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம்…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் இபிஎஸ் வேட்பாளரை அறிவித்த நிலையில், அதே தொகுதியில் ஓபிஎஸ்-ம் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்து வருகின்றன.

கடந்த 13 ஆம் தேதி, இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்தன. இதனிடையே நேற்று, கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அன்பரசனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையும் படியுங்கள் : அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

இந்நிலையில் இன்று, அதே தொகுதியில், கர்நாடக மாநில அதிமுக மாணவர் அணிச் செயலாளர் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். புலிகேசி நகர் தொகுதியில் பாஜக சார்பில் முரளி, அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடும் நிலையில், ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை அறிவித்துள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.