புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு…!

புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்றார்.

புதுச்சேரி மாநிலத்தின் 16-வது சட்டமன்ற முதலமைச்சராக என்,ஆர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்றார். லோக் நிவாசில் (ஆளுநர் மாளிகை) நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து பாஜகவின் நமச்சிவாயம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸின் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டார்.

அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. புதிய அமைச்சர்கள் வரும் 18- ஆம் தேதி பதவி ஏற்கும் போது மற்ற அமைச்சர்களுடன் சேர்த்து இலாகா ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.