அமித்ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் பதவி விலக தயார் – பாஜகவிற்கு மம்தா பானர்ஜி சவால்

தேசிய கட்சி அங்கீகாரம் தொடர்பாக அமித்ஷாவுடன் பேசியதை பாஜக நிரூபித்தால், பதவி விலக தயார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி அங்கீகாரத்தை…

தேசிய கட்சி அங்கீகாரம் தொடர்பாக அமித்ஷாவுடன் பேசியதை பாஜக நிரூபித்தால், பதவி விலக தயார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி அங்கீகாரத்தை சமீபத்தில் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்நிலையில், மீண்டும் தேசிய கட்சி அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்புகொண்டு பேசியதாக சிங்கூரில் நடைபெற்ற ஒரு பேரணியின் போது எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

இந்த சூழலில் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேசிய கட்சி அங்கீகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், தாம் பேசியதாக பாஜகவினர் பொய் பரப்புவதாக குற்றம்சாட்டினார். மேலும், பொய்களை பரப்புவோருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணையம் குறித்து பேசிய அவர் “ நாங்கள் அரசியலில் இருக்கிறோம், தேர்தல் ஆணையம் உங்கள் கையில் இருப்பதால் எங்கள் கட்சியின் தேசிய அங்கீகாரம் குறித்து நீங்கள் விரும்பியதை செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? தேர்தல் ஆணையத்தின்  மீது நாங்கள்  மரியாதை வைத்திருந்தோம்.

பத்து வருட இடைவெளியில்  இந்த அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சிகளின் கடைசி மதிப்பாய்வு 2014 இல் தான் நடந்தது. எனவே, 10 ஆண்டுகள் அதற்குள் முடிவடைந்து விட்டதா என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.