பாரிமுனை கட்டட விபத்து – நள்ளிரவில் நிறைவு : இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என தகவல்

பாரிமுனை கட்டட விபத்து 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த நிலையில் நள்ளிரவில் நிறைவடைந்தது.  இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் பழமை வாய்ந்த நான்கு மாடிக்…

பாரிமுனை கட்டட விபத்து 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த நிலையில் நள்ளிரவில் நிறைவடைந்தது.  இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் பழமை வாய்ந்த நான்கு மாடிக் கட்டடம் புதுப்பிக்கும் பணி, கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்துள்ளது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இக்கட்டடம் இடிந்து விழுந்தது.
தகவலறிந்து தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் நிகழ்விடம் விரைந்தனர். மீட்புப்பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என் நேரு ஆகியோர் நேரில் பார்வையிட்டு, கட்டட விபத்து குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அதிநவீன ஸ்கேன் இயந்திரம், மோப்ப நாய்கள் உதவியுடன், 14 மணி நேரமாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்பு துறையின் இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன், இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கற்களை அகற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன, டி.எல்.சி கேமரா, கட்டர் போன்ற அதிநவீன கருவிகளை கொண்டு கட்டட இடர்பாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளார்களா என ஆய்வு செய்தோம். இந்த கட்டிட இடர்பாடுக்குள் 95 சதவீதம் யாரும் சிக்கவில்லை என தெரிவித்தார்.

இதன் பின்னர் இடர்பாடுகள் சிக்கிய கட்டிடத்தின் கழிவுகள் அகற்றப்பட்டது. இதனையடுத்து   14 மணி நேரமாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவு நள்ளிரவு 2மணிக்கு நிறைவடைந்தது. மேலும் அரண்மனைக்காரன் தெரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனிடையே தலைமறைவான கட்டட உரிமையாளர் பரத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.