ராகுல் காந்தி பிரதமராவதற்கான முதல்படிதான், கர்நாடக தேர்தல் முடிவு – எம்.பி.திருநாவுக்கரசு

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவதற்கான முதல் படி தான் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஆய்வுக் குழு உறுப்பினர்களான காங்கிரஸ்…

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவதற்கான முதல் படி தான் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஆய்வுக் குழு உறுப்பினர்களான காங்கிரஸ் எம்பிக்கள் திருநாவுக்கரசர், மாணிக் தாகூர் ஆகியோர் இன்று காலை திருப்பதி மலையில் ஏழுமலையானை வழிபட்டனர். சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவர்களுக்கு வேத ஆசி வழங்கினர்.

பின்னர், கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பின் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். கர்நாடக தேர்தல் முடிவுகள் அடுத்த நடைபெற இருக்கும் பொது தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல் காந்தி நாட்டின் பிரதமர் ஆவதற்கான முதல் படி என தெரிவித்தார்.

இதைனையடுத்து, கர்நாடக தேர்தலில் 40க்கும் மேற்பட்டோர் பாஜக அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டதன் காரணமாகவே பாரதிய ஜனதா கட்சி அங்கு தோல்வி அடைந்து விட்டது என்று அண்ணாமலை கூறியது பற்றி கேட்டதற்கு, பதிலளித்து பேசிய அவர், காங்கிரஸ் சார்பில் கூட 60க்கும் மேற்பட்ட அதிர்ச்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அண்ணாமலை கூறுவதையெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள இயலாது. கர்நாடகாவில் பாஜக நடத்தியது திறமை இல்லாத ஊழல் ஆட்சி. எனவே பொதுமக்கள் காங்கிரசுக்கு வாக்களித்து உள்ளனர் என்று கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.