காரைக்கால் : 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞர் போக்சோவில் கைது

காரைக்காலில் 13 வயது சிறுமியிடம் நண்டை விட்டு பயமுறுத்தி பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலில் ஈடுபட முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.   புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அன்பு நகர் பகுதியில் உள்ள…

காரைக்காலில் 13 வயது சிறுமியிடம் நண்டை விட்டு பயமுறுத்தி பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலில் ஈடுபட முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அன்பு நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அவரது மகள் 14 வயது சிறுமி, எதிர் வீட்டில் உள்ள உறவினர் வீட்டு வாசலில் செல்போன் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மைக்கேல் (வயது 24) என்பவர் அங்கு வந்து சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

 

பின்னர் வீட்டிற்கு சமைக்க கொண்டு வந்த நண்டை சிறுமியின் காலில் விட்டு பயமுறுத்தி சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மேலும் செல்போனை பிடுங்கி அத்துமீறலில் முயற்சித்துள்ளார். இதையடுத்து, சிறுமி சத்தம் போட்டு உள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் மைக்கேலை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

மேலும் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை இது குறித்து புகார் அளித்து மைக்கிலை ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, மைக்கில் மீது போக்சோ
சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

 

பின்னர் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், மைக்கிலை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மைக்கேல் புதுச்சேரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.