மக்கள் கேட்காமலும் முதல்வர் ஸ்டாலின் உதவுவார் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆச்சிபட்டியில் மாற்றுகட்சியை சேர்ந்த 50000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், அதிமுகவின் கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ,தேமுதிகவின் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் உள்ளிட்ட மாற்றுகட்சியைக் சேர்ந்த 50000 திமுகவில் இணைந்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பல்வேறு இயக்கங்களிலிருந்து வருகை தந்துள்ளவர்களை திமுக தலைவராக நான் உங்களை வரவேற்கிறேன். மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களைக் மாற்றான் தோட்டத்திலிருந்து வந்தவர்கள் போல் இல்லாமல் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள் என்றார்.
பின்னர் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
மாற்றுக் கட்சியிலிருந்து 922 முக்கிய நிர்வாகிகள் உட்பட பாஜக, மநீம, அதிமுக உள்ளிட்ட 55000 பேர் திமுகவின் இன்று இணைந்துள்ளனர். உழைப்பின் மறு உருவம் நமது முதல்வர்.
நாடு போற்றும் நல்லாட்சி தந்தவர் நமது முதல்வர். நோட்டாவோடு போட்டி போடும் இயக்கம் மூளையற்ற மூடர் கூட்டம். முழங்கால் தண்ணியில் படகு ஓட்டி நாடகம் போடும் முப்பொழுதும் பொய்கள். உண்மை தான் இறுதி வரை வாழும்.
தமிழகம் வாழ வேண்டுமென்றால் தளபதி தான் ஆள வேண்டும். எந்நாளும் மன்னவர் காட்டும் வழிநடப்போம். ஒற்றை செங்கல் காட்டி செங்கோல் வென்ற சின்னவர் சொல் கொண்டு வென்றிடுவோம்.
சிலிண்டர் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அதிகமாகியுள்ள ஒன்றிய அரசு, எந்த முகத்தைக் கொண்டு தமிழகத்திற்க்குள் வருகிறீர்கள். இதைக் பொதுமக்கள் பாஜகவிடம் கேட்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 39/39 திமுக வெற்றி பெறும்.
போராடி தான் இந்த அரசிடம் கேட்க வேண்டியதில்லை. கேட்காமலும் முதல்வர் செய்வார்.
ஆழியார் பிரச்சனை மட்டுமல்ல, கொப்பரை தேங்காய் விலை உயர்வு குறித்தும் நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். பொள்ளாச்சியிலும், திருப்பூரிலும் ஆழியார் பிரச்சனையைக் கையில் எடுத்து கொண்டு அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என்றார் செந்தில் பாலாஜி.








