திருச்சி விமான நிலையத்தில் எனது ரசிகர்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியது
வருத்தம் அளிக்கிறது என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.
கோப்ரா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி,
மிருனாளினி மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரிக்கு
வந்திருந்தனர். கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய அவர்கள் மாணவர்கள் எழுதிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இதனையடுத்து கோவை கொடிசியா அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விக்ரம் கூறியதாவது:
இந்தப் படத்தில் அடிப்படை அருமையாக செதுக்கப்பட்டிருக்கிறது. மாறுபட்ட கதை. கதாப்பாத்திரம் சொல்லும்போது அதற்கேற்ப மாறுவது எனக்கு பிடிக்கும். கோப்ரா திரைப்படத்தை பல்வேறு சவால்களைக் கடந்து சிரமப்பட்டு உருவாக்கியுள்ளோம்.
3 ஆண்டுக்கு பின் திரையரங்கில் படம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குனர் அஜய்க்கு நன்றி. கடைசி வரை திரைப்படத்தில் நடித்து கொண்டே இருப்பேன்.
திருச்சி விமான நிலையத்தில் எனது ரசிகர்கள் மீது மத்தியத் தொழிலக படையினர் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது. சமீபமாக வரும் படங்கள் அதிக அளவில் ஹிட் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கிரிக்கெட்டை விட சினிமாவில் சிறப்பாக செயலாற்றி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றார் விக்ரம்.
கோப்ரா படத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.








