முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

தீபக் சாஹரின் காதலி ஜெயா பரத்வாஜ் யார்?

கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் காதலி ஜெயா பரத்வாஜ், இந்தி நடிகரின் சகோதரி என தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரில், துபாயில் நேற்று நடந்த போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின்போது சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர், தனது தோழிக்கு மோதிரம் அணிவித்து, காதலை வெளிப்படுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அங்கிருந்த கேப்டன் தோனியின் மனைவி சாக்சி உள்ளிட்டோர் கைகளைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சித்தார்த் பரத்வாஜுடன் ஜெயா.. தீபக் சாஹர்

இந்நிலையில் தீபக் சாஹரின் காதலி யார் என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகி யுள்ளது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் இந்தி நடிகருமான சித்தார்த் பரத்வாஜின் தங்கைதான் இந்த ஜெயா பரத்வாஜ். டெல்லியில் கார்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அவரை தீபக் சாஹர் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். ஜெயா பரத்வாஜை, இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு தீபக் சாஹர் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக அவரை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார் தீபக். அங்கு தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மழை வெள்ளப் பாதிப்பு: கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஆய்வு

EZHILARASAN D

மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்: கவிஞர் வைரமுத்து

Web Editor

வரும் காலங்களில் மரணத்தை வெல்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் -இஸ்ரோ தலைவர்

EZHILARASAN D