கன்னியாகுமரி வாணியாக்குடி கடற்கரை கிராமத்தில் தென்னிந்திய அளவிலான
பகல் இரவு கால் பந்தாட்ட போட்டி நேற்று துவங்கப்பட்டது. 24 அணிகள் கலந்து கொண்டு மோதும் நிலையில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கால்பந்தாட்ட போட்டிகளில் சிறந்து விளங்கி வரும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை
பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் தினமும் விளையாட்டு பயிற்சி மட்டும் இன்றி மாவட்ட மற்றும் மாநிலம் அளவில் போட்டிகளையும் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில்
குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியில் உள்ள புனித ஜேம்ஸ் விளையாட்டு கழகம்
சார்பில் 20 ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான பகல் இரவு கால்பந்தாட்ட போட்டி
நேற்று துவங்கியது.
இதில் தமிழகம், கேரள, பாண்டிச்சேரி பகுதிகளை சேர்ந்த 24 அணிகள்
மோதுகின்றன. ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெற்றி பெறும்
அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் கேடயமும் வழங்கப்படவிருக்கிறது. இந்த
போட்டியை காண தமிழகம் மட்டும் இன்றி கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்
ரெ. வீரம்மாதேவி







