சாலையில் தேங்கிய மழைநீர் – நீச்சல் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த இறையுமான்துறையில் பழுதான சாலையில் நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் நீச்சல் அடித்து வார்டு உறுப்பினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த நிரோடியில்…

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த இறையுமான்துறையில் பழுதான சாலையில் நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் நீச்சல் அடித்து வார்டு உறுப்பினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த நிரோடியில் இருந்து இறையுமான்துறை செல்லும் சாலையானது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. சாலை அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியதால் சாலை மிகவும் பழுந்தடைந்து காணப்படுகிறது.

இச்சாலையை தான் இப்பகுதி மாணவ,மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கழிவுநீர் ஓடையில் இருந்து சாலையில் நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

இந்நீரில் சோப்பு போட்டு குளித்து நீச்சல் அடித்து ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜோஸ் பில்பின் தனது எதிர்ப்பை தெரிவித்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.