விண்வெளி ஆய்வையே லட்சியமாகக் கொண்டுள்ள கன்னட தம்பதியினர் 2023ஆம் ஆண்டு முதன்முறையாக விண்வெளிக்கு பலூன் மூலம் ராக்கெட் செலுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கே TOUGH கொடுக்கும் கனடாவைச் சேர்ந்த தம்பதியினரைக் குறித்து தற்போது பார்க்கலாம்….
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் எலான் மஸ்க்கின் SPACE-X நிறுவனம் ஈடுபட்டு வருவது நமக்குத் தெரியும். ஒரு பேச்சிற்கு நீங்கள் விண்வெளிக்கு செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். பால்வெளியில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தபடியே நீங்கள் விண்வெளிக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரென உங்களுக்கு இருமல் வருகிறது. உங்களுக்கு தேவை ஒரு COUGH SYRUP. ஆனால் பிரச்னை என்னவென்றால் நீங்கள் SPACE-X நிறுவனத்தின் அடுத்த ராக்கெட் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
ஆனால், உங்களுக்கோ உடனடியாக இருமல் மருந்து தேவை. இந்த இடத்தில் தான் நீங்கள் Saharnaz Safari, Sohrab Haghighat தம்பதி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இருவரும் கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள SPACE RYDE விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகின்றனர். குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்கு தீங்களிக்காத வகையில், பலூன் மூலம் ராக்கெட்களை ஏவுவதே இவர்களின் இலக்கு. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு கொரியர் அனுப்புவது போன்று பூமியிலிருந்து விண்வெளிக்கு பொருட்களை அனுப்பும் வேலையில் தான் இந்த தம்பதியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா… பலூன் மூலமாக விண்வெளி சுற்றுப்பாதை வரை ஸ்மார்ட் ராக்கெட்டை கொண்டு சென்று, அங்கிருந்து ராக்கெட் மூலமாக பார்சலைக் கொண்டு செல்வதுதான் இவர்களின் திட்டம். ராக்கெட் செலுத்தப்பட்ட பிறகு அதை பூமியிலிருந்து கணினி மூலம் நினைத்த இடத்திற்கு அனுப்ப இயலும். சரி, இப்படி அனுப்புவதற்கு எவ்வளவு செலவாகும் என்றால், இந்திய மதிப்பில் JUST 1 கோடியே 95 லட்ச ரூபாய்தான். இதுவே அதிகம் என நினைப்பவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இதே வேலைக்கு எலான் மஸ்க்கின் SPACE-X நிறுவனம் எவ்வளவு வாங்கும் தெரியுமா. 8 கோடியே 65 லட்ச ரூபாய். இது அனைத்தும் இப்போதைக்கு சோதனை அள்வில் மட்டுமே இருந்தாலும், 2040ம் ஆண்டில் விண்வெளிக்கு பொருட்களை அனுப்பும் சந்தையானது இந்திய மதிப்பில் 8 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
பள்ளிக் காலத்திலிருந்தே காதலித்து வரும் Safari, Sohrab தம்பதியினருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. விண்வெளி ஆய்வையே லட்சியமாகக் கொண்டுள்ள இந்த தம்பதியினர் 2023ம் ஆண்டு முதன் முறையாக விண்வெளிக்கு பலூன் மூலம் ராக்கெட் செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு அடுத்த ஆண்டு நிலவுக்கு பார்சல் அனுப்பவும் திட்டமிட்டு, அதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்குன்றனர் இந்த ROCKET COUPLES.
-ராணி கார்த்திக்.